திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By சினோஜ்
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2023 (18:08 IST)

கொரொனா தாக்கிய ஆண்களுக்கு விந்தணு பாதிப்பு - எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆய்வில் தகவல்

corono virus
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து  இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவிய நிலையில் தற்போது, சீனாவில்  பிஎஃப்-7 என்ற கொரொனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருவதால் அங்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிஎஃப்-7 ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில் வெளி நாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரொனா வைரஸ் தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுவின் பாதிப்பு ஏற்படுவதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆய்வின் முடிவில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் டெல்லி, பாட்னா, மற்றும் ஆந்திர மாநிலம் மங்களகிரியில் உள்ள  பிரபல எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரொனா வைரஸ் பற்றிய ஆய்வை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

அதில்,2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கொரொனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 19 வயது முதல் 43 வயதிற்கு உட்பபட்ட 30 ஆண்களுக்கு விந்தணு மருத்துவ ஆய்வு சோதனை செய்துள்ளனர்.

இதையடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அந்த விந்தணுக்களில் சார்ஸ் கோவ்-2 இல்லை; எனினும் இந்த விந்தணுவின் தரம் மோசமாக இருப்பதாகவும், இரண்டரை மாதங்களுக்குப் பிறகும் கூட இது நல்ல நிலையை அடையவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 30 பேருக்கு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 40% விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும், இரண்டரை மாதங்களுக்குப் பிறகுகூட 3 பேருக்கு இந்த பிரச்சனை இருந்ததாகவும் தகவல் வெளியாகிறது.

இந்த 30 பது  பேரில் முதல் விந்து மாதிரியில் 30 பேரில் 10 பேருக்கு விந்தணுவின் அளவும்கூட 1.5 மில்லிக்கும் குறைந்திருப்பதாகவும்,இந்த விந்து தள்ளல் என்பது 1.5 முதல் 5 மில்லியளவு வரை இருக்கனும் எனவும், கூறப்படுகிறது.

இதனால், ஆண்களின் விந்து திரவத்தின் உயிர்ப்புத்தன்மை, அளவு ஆகியவையும் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வில் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த ஆய்வுகள்  உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  ஐவிஎப் மையத்தின் நிறுவன மருத்துவர் கவுரி அகர்வால் கூறியுள்ளளது குறிப்பிடத்தக்கது.