புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 29 ஜூலை 2017 (15:45 IST)

குடிப்பழக்கத்தை கண்டித்த மகனை சுட்டுக் கொன்ற தந்தை

உத்தரபிரதேச மாநிலத்தில் குடிப்பழக்கத்தை கண்டித்த மகனை தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மது கடைகளுக்கு எதிராக நாடு முழுவதும் பலரும் போராட்டம் செய்து வருகின்றனர். மதுவால் ஆங்காங்கே குற்றங்களும் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் குடிப்பழக்கத்தை கண்டித்த மகனை தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள ரிகுண்டி என்ற கிராமத்தில் திரேந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவரின் தந்தை மன்மோகன் லோதி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். மகன் தொடர்ந்து அவரது தந்தைக்கு குடிப்பழக்கத்தை விட எடுத்துக் கூறி வந்துள்ளார். ஆனால் அவரது தந்தை குடிப்பழக்கத்தை விடவில்லை.
 
சம்பவத்தன்று மகனுக்கும் தந்தைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தந்தை அவருடைய துப்பாக்கியால் சொந்த மகனையே சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த மகன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.