வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 26 பிப்ரவரி 2025 (17:42 IST)

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற மருமகன் மீது நெருப்பு பற்றியதால், அவரும் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
 
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ண தாஜி என்பவர், பாபி தாஜி என்பவரின் மகளை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், கிருஷ்ண தாஜி அடிக்கடி மது போதைக்கு அடிமையாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவருடைய மனைவி ஆத்திரத்தில் தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். பலமுறை அழைத்தும் திரும்ப வரவில்லை.
 
இதற்கு மாமியாரே காரணம் என சந்தேகித்த கிருஷ்ண தாஜி அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அப்போது, மாமியாருக்கு கண்  அறுவை சிகிச்சை நடைபெற இருந்தது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முன்வந்து, "நான் அழைத்துச் செல்கிறேன், பாருங்கள்," என்று கூறியுள்ளார்.
 
அவர் கூறியதை நம்பிய மாமியார், அவருடன் டெம்போவுக்கு ஏறியதும், கதவை சாத்திவிட்டு பாபி தாஜியை கிருஷ்ண தாஜி கடுமையாக தாக்கியுள்ளார். அதன் பிறகு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ அவர்மீதும் பரவியது.
 
இந்த சம்பவத்தில், கிருஷ்ணதாஜி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது மாமியார் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva