புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 ஜூலை 2021 (12:05 IST)

ஒரு கிண்ணம் நெறைய மாவ எடுத்து…! – ட்ரெண்டாகும் நெருப்பு தோசை வீடியோ!

சமூக வலைதளங்களில் உணவு சம்பந்தமான வீடியோக்கள் அடிக்கடி ட்ரெண்டாகி வரும் நிலையில் தற்போது நெருப்பு தோசை ட்ரெண்டாகியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தகவல் பரிமாற்றம் வேகமடைந்துள்ள அதேசமயம் வட்டார உணவு வகைகள் தேசிய அளவிலான புகழை பெற தொடங்கியுள்ளன. மக்கள் பலர் வட்டார உணவு வகை சார்ந்த வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்தூரின் நெருப்பு தோசை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. வடிவேலு காமெடியில் வருவது போல ஒரு கிண்ணம் நிறைய மாவை எடுத்து தோசை கல்லில் ஊற்றி இன்னபிற இதியாதி பொருட்களை சேர்ந்து ரோல் செய்து தரப்படும் இந்த தோசையை சுவைக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.