இந்தியாவில் உள்ள குடும்பங்களில் இத்தனை டன் தங்கமா? உலக தங்க கவுன்சில் தகவல்
இந்தியர்கள் திருமணம், நிச்சயதார்த்தம், அக்சய திரிதியை உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வீட்டில் தங்கம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள குடும்பங்களில் சராசரியாக 25000 தன் தங்கம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் சராசரியாக ரூ.39900 ஆக இருந்த 10 கிராம் 24 கிராம் தங்கம் விலை கடந்த ஆண்டு டிசம்பரில் ரூ.62200 ஆக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்திய குடும்பங்களில் உள்ள தங்கத்தின் மதிப்பு 2023ல் ரூ149.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து உலக தங்க கவுன்சில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் உள்ள குடும்பங்களில் நகை வடிவில் மொத்தம் 25000 டன் தங்கம் உள்ளது. உலகில் உள்ள தங்கத்தில் 10 லிருந்து 11சதவீதம் தங்கம் நகை மற்றும் நாணய வடிவில் இந்தியாவில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.