1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2017 (15:18 IST)

தண்டனை கொடுத்த நீதிபதியை செருப்பால் அடித்த பாலியல் குற்றவாளி!

தண்டனை கொடுத்த நீதிபதியை செருப்பால் அடித்த பாலியல் குற்றவாளி!

கேரள மாநிலம் வயநாட்டில் பாலியல் குற்றவாளி ஒருவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினார் நீதிபதி ஒருவர். இதனால் அந்த பாலியல் குற்றவாளி நீதிபதியை செருப்பால் சரமாரியாக அடித்தார்.


 
 
கேரள மாநிலம் வயநாட்டில் ஆறுமுகம் என்ற நபர் மீது 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை விசாரித்த நீதிபதி பஞ்சாபகேசன் ஆறுமுகத்துக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
 
21 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்ததால் நீதிபதி மீது கோபம் கொண்ட ஆறுமுகம் தனது செருப்பை எடுத்து நீதிபதி மீது சரமாரியாக வீசி தாக்கினார். இதனால் காயமடைந்த நீதிபதியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் நீதிபதியை தாக்கியதாக ஆறுமுகம் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.