செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (21:52 IST)

கேரளாவுக்கு ரூ.21 ஆயிரம் நிவாரண நிதி கொடுத்த பாலியல் தொழிலாளிகள்

கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பால் அம்மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கானோர் தங்களுடைய் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி, பொருளுதவி குவிந்து வரும் நிலையில் அகமதாபாத் நகரை சேர்ந்த பாலியல் தொழிலாளிகள் ரூ.21 ஆயிரம் கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி இம்மாத இறுதிக்குள் இன்னும் ஒரு லட்சம் ரூபாய் வசூல் செய்து தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர்
 
ஏற்கனவே இதே பாலியல் தொழிலாளிகள் சென்னை வெள்ளத்தின்போதும் இதேபோல் பல்வேறு தேசிய பேரிடர் ஏற்பட்ட போதும் நிதியுதவி அளித்துள்ளனர் என்பதும் இதுவரை இவர்கள் மொத்தம் சுமார் ரூ.21 லட்சம் நிதியுதவி செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.