செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 19 ஜூன் 2017 (18:49 IST)

பள்ளி மாணவியை கற்பழித்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிய கொடூரர்கள்

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்தி கூட்டாக கற்பழித்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிய கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பீகார் மாநிலம் தெற்கு பகுதியில் உள்ள லக்கிசராய் மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கற்பழித்துள்ளனர். பின் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக ரயிலில் ஏற்றி, ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். 
 
தண்டவாளத்தில் கிடந்த மாணவியை கண்ட அப்பகுதி மக்கள், மாணவியை மீட்டு பாட்னா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவமனை நிர்வாகம் மாணவியை அனுமதிக்க முதலில் மறுப்பு தெரிவித்துள்ளது. பின் ஆறு மணி நேரம் கழித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி உயிருக்கு போராடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
 
இதையடுத்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்தனர். ஆறு பேர் கொண்ட கும்பலில் ஒருவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.