1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 19 நவம்பர் 2016 (17:28 IST)

மொத்தம் ரூ.1.26 லட்சம் கோடி டெபாசிட் - எஸ்.பி.ஐ தகவல்

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதற்கு பதில் புதிய நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். 


 

 
அதனையடுத்து, 9ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தங்களின் வங்கி கணக்கில் செலுத்த ஆரம்பித்தனர்.
 
முக்கியமாக, இந்தியா முழுவதும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியில்தான் மிக அதிகமானோர் தங்களின் கணக்குகளை வைத்துள்ளனர். அந்த நிலையில் அந்நிலையில் கடந்த 8 நாட்களில் மட்டும் ரூ.1.26 லட்சம் கோடி டெபாசிட்டை பெற்றுள்ளது எஸ்.பி.ஐ.
 
இதன் மூலம் வங்கியின் அடுத்த நிதியாண்டு வரையான காலத்திற்கு நிர்ணயித்திருந்த வர்த்தக இலக்குகளை ஓரளவு பூர்த்தி அடைந்துவிட்டதாக எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.