வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வியாழன், 11 மே 2017 (16:15 IST)

ஏடி.எம்.களில் பணம் எடுத்தால் ரூ.25 - எஸ்.பி.ஐ அதிரடி அறிவிப்பு

ஏடி.எம் மையங்களில் இனி ஒவ்வொரு முறை பணம் எடுக்கப்படும் போதும், கட்டணத் தொகை வசூலிக்கப்படும் என எஸ்.பி.ஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.


 

 
சமீபகாலமாக எஸ்.பி.ஐ வங்கி அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம், கிராமப்புற வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் இருப்பு தொகையாக ரூ.1000 வைத்திருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால் உரிய அபராதம் செலுத்த வேண்டும். அதேபோல், பெருநகர மற்றும் நகர் பகுதி வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. 
 
ஆனால், அதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பவே, அதை வாபஸ் பெற்றது. இந்நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் எஸ்.பி.ஐ ஏடி.எம் மையங்களில் பணம் எடுக்கும் ஓவ்வொரு முறையும் ரூ.25 வசூலிக்கப்படும் என எஸ்.பி. ஐ அறிவித்துள்ளது.
 
இதற்கு முன், மற்ற தனியார் மற்றும் அரசு வங்கி ஏ.டி.எம் மையங்களில் மாதத்திற்கு 5 பணவர்த்தனை இலவசம் என்ற நடைமுறையைத்தான் எஸ்.பி.ஐ வங்கியும் கடைபிடித்து வந்தது. ஆனால், தற்போது ஒவ்வொரு பணவர்த்தனைக்கும் ரூ.25 செலுத்த வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
எஸ்.பி.ஐ வங்கியை போல், மற்ற தேசிய மற்றும் தனியார் வங்கிகளும் இதை கடைபிடித்தால், மக்கள் இனி ஏ.டி.எம்-களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.25 செலுத்த நேரிடும் என்பதால், இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.