1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 ஜனவரி 2017 (11:01 IST)

2000 ரூபாய் நோட்டு டிசைனில் சேலை: எப்படிலாம் யோசிக்கிறாங்க!!

ரூ.2000 நோட்டின் டிசைனில், சூரத்தில் சேலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அமோகமாக விற்பனையாகி வருகிறது.


 

 
தற்போது புதிய ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்கள் பிங்க் வண்ணத்தில் காட்சியளிக்கிறது. மேலும், இது மிகவும் எடை குறைவாக, சிறிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் ரூ.2000 நோட்டுக்கள் டிசைனில் சூரத் நிறுவனம் ஒன்று, சேலை ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த சேலை தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. 
 
பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் சேலையை வாங்கிச் செல்கின்றனர் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.