வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 2 ஜூலை 2023 (17:31 IST)

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி: கட்சி உடைந்த நிலையில் சரத் பவார் பேட்டி..!

sarath bhavar
தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து அதிலிருந்து பிரிந்த அஜித் பவார் தலைமையிலான அணி ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணியில் இணைந்தது என்பதும் அஜித் பவார் துணை முதலமைச்சர் ஆகவும் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர்களாகவும் பதவி ஏற்று கொண்டனர் என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் கட்சி உடைந்த நிலையில் சரத் பவார் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய இருப்பதாவது: 2 நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி,  தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு முடிந்து போன கட்சி என்று  கூறினார்
 
NCP மீது நீர்ப்பாசன புகார் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார், ஆனால் எனது கட்சியினர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அமைச்சராகியுள்ளனர், இதன் மூலம் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லை என நிரூபணமாகியுள்ளது, இதனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என  தேசியவாத காங். தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran