புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (19:22 IST)

’திரையுலகில் சர்ச்சை’ - பாகிஸ்தான் நடிகர்களுக்கு துணை நிற்கும் பிரபல நடிகர்!

கடந்த 18 ஆம் தேதி, ஜம்மு காஸ்மீர் மாநிலம் உரியில் பாகிஸ்தான் தீவிரவதிகள், தாக்குதல் நடத்தியதில், 18 இந்திய ராணுவ வீரர்கள் உரிழந்தனர். 
 

 
 
 
இதனால், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர், பாகிஸ்தான் நடிகர்களை இந்திய நாட்டைவிட்டு வெளியேறுமாறு மிரட்டல் விடுத்தனர். இதை அடுத்து, சில பாகிஸ்தான் நடிகர்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள்.
 
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இது குறித்து கூறியதாவது,  ”அவர்கள் கலைஞர்கள். தீவிரவாதிகள் இல்லை” என்று கூறியுள்ளார்.
 
இதை அடுத்து, சல்மான் கானை சிலர் இணையதளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் இந்தியர்கள் நடித்த திரைப்படம் வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.