வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 ஜூன் 2023 (17:50 IST)

மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் இருந்து சாக்ஷி மாலிக் விலகல்?

delhi protest players
மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

இந்திய  மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பிரிஜ்பூஷண் சரண்சிங். இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல்  டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

இந்த  நிலையில் சமீபத்தில்  மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீஸாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.  இதில், பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போட்டிருந்த கொட்டகைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.

இதையடுத்து, தேசத்திற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்

இந்த விவகாரத்தில் மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசு  நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக  வரும் ஜூன் 9 ஆம் தேதி  நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று வடமாநில விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் தெரிவித்ததாகவும்,  கிழக்கு ரயில்வே பணியில் சேரவுள்ளதாகவும்  தகவல் வெளியாகிறது.