வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (07:47 IST)

என்னை தோற்கடித்தால் அரசியலில் இருந்து விலக தயார்: ராகுல்காந்திக்கு சாமியார் சவால்

என்னை எதிர்த்து போட்டியிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெற்றி பெற்றுவிட்டால் தான் அரசியலில் இருந்து விலகத்தயார் என பாஜக எம்.பி.யும் சாமியாருமான சாக்ஷி மகராஜ் சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சாமியார் சாக்ஷி மகராஜ் மேலும் கூறியதாவது:  என்னுடைய உன்னவ் தொகுதியில் எனக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு என்னை அவர் தோற்கடித்துவிட்டால், நான் அரசியலில் இருந்தே விலகி தயார். ஆனால் அதேசமயம் ராகுல்காந்தியை நான் வென்றுவிட்டால் அவர் இத்தாலிக்குச் சென்றுவிட வேண்டும். இந்த சவாலை ஏற்க ராகுல்காந்தி தயாரா? என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ராகுல்காந்தி மானசரோவர் யாத்திரை சென்றார். அவர் யாத்திரை சென்றதில் தவறில்லை. ஆனால் ஆத்மசுத்தம் இல்லாமல் அவர் யாத்திரை சென்றது பெரும் தவறு. கோயிலுக்கு செல்லும்போது புலால் உண்ணக்கூடாது என்ற அடிப்படை கூட தெரியாதவர் ராகுல்காந்தி' என்று சாக்ஷி மகராஜ் மேலும் விமர்சனம் செய்தார்.

சில நேரங்களில் தன்னை சிவபக்தராகவும், சில நேரங்களில் இஸ்லாமியர் போல் தொப்பி அணிந்தும் சூழலுக்கு ஏற்றவாறு ராகுல்காந்தி மாறுகிறார் என  சாக்ஷி மகராஜ், ராகுல்காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.