வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (09:01 IST)

அந்த வார்த்தையை மட்டும் சொல்லிடாதீங்க! – தலைவருக்கு அட்வைஸ் செய்த தொண்டர்!

மோகன் பகவத்
ஜார்கண்ட்டில் நடந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தேசியவாதம் என்ற சொல்லை இனி உபயோகப்படுத்த வேண்டாம் என பேசியுள்ளார்.

அவர் பேசியபோது ”இங்குதான் தேசியவாதம் என்ற வார்த்தை பொதுத்தன்மை என்ற அர்த்தத்தில் உபயோகிக்கப்படுகிறது. ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நான் இலண்டன் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் பேசிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் ‘தேசியவாதம்’ என்ற வார்த்தையை இங்கு பேசும்போது மேடையில் பயன்படுத்தாதீர்கள் என்று கூறினார்.

ஏனென்றால் மேற்கத்திய நாடுகளில் தேசியவாதம் என்ற வார்த்தை ஹிட்லர் ஆட்சியையும், அதன் பாசிச கொள்கையையும் தொடர்புப்படுத்தி பார்க்கப்படுகிறதாம். ஹிட்லரின் ஆட்சியை நினைவுப்படுத்தும் அந்த சொல்லை நாம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என பேசியுள்ளார்.