டாக்ஸி டிரைவர் கணக்கில் ரூ.9,806 கோடி டெபாசிட்!!
பஞ்சாப் மாநிலத்தில் டாக்ஸி டிரைவர் ஒருவருக்குச் சொந்தமான ஜன் தன் வங்கிக் கணக்கில், ரூ.9,806 கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் பல்வீந்தர் சிங். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ், சில மாதங்களுக்கு முன்பு வங்கி சேமிப்புக் கணக்கை தொடங்கியுள்ளார். ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா கிளையில் அவர், சேமிப்புக் கணக்கை நிர்வகித்து வந்தார்.
சில நாட்கள் முன்பாக, திடீரென பல்வீந்தர் சிங்கின் வங்கிச் சேமிப்புக் கணக்கில் ரூ.9,806 கோடி டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்தது. தனது வங்கிக்குச் சென்று, இதுபற்றி விளக்கம் கேட்டுள்ளார்.
ஆனால், வங்கியின் மேலாளர் பல்வீந்தர் சிங்குக்குப் புதிய பாஸ்புக் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார். அதை வாங்கிப் பார்த்த பல்வீந்தர் அதிர்ச்சியடைந்தார். காரணம், ரூ.9,806 கோடியை காணவில்லை. வெறும் ரூ.200 மட்டுமே இருந்தது.
இதன் உண்மை பின்னணி என்னவெனில் வங்கியின் அக்கவுண்ட் மேலாளர் தவறுதலால், பல்வீந்தர் சிங் சேமிப்புக் கணக்கில் ரூ.9,806 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு திருப்பும் என்னவென்றால் அது பணம் டெபாசிட் தொகை அல்ல. வங்கியின் கணக்கு விவர எண் ஆகும்.