1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2017 (14:08 IST)

ரூ.4 கோடி செல்லாத நோட்டு திருப்பதி உண்டியலில் டெபாசிட்: மாற்ற முடியாமல் தவிக்கும் தேவஸ்தானம்!!

கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி உயர்மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பினை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.


 
 
இந்நிலையில், திருப்பதி உண்டியலில் கடந்த சில மாதங்களாக பக்தர்கள் அளித்த காணிக்கையாக ரூ.4 கோடி குவிந்துள்ளதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் செல்லாத பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள்.
 
அரசு விதிகளின்படி, செல்லாத நோட்டுகளை 10 மேல் வைத்திருந்தால், குறைத்தபட்ச அபராதமாக 10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்பதால் உண்டியலில் இவ்வளவு நோட்டுகள் குவிந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 
 
ஆனால் சிக்கல் என்னவெனில் ரூ.4 கோடி செல்லாத பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை புது நோட்டுகளாக மாற்ற முடியாமல் தேவஸ்தானம் தவித்து வருகிறது.
 
இது தொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், ரிசர்வ் வங்கியின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் தெரிகிறது.