செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 டிசம்பர் 2022 (21:16 IST)

8 மாதங்களில் 1000 கோடி ரூபாய்: திருப்பதி உண்டியலில் வரலாறு காணாத வசூல்!

tirupathi
திருப்பதி கோவில் உண்டியலில் இந்த ஆண்டு கடந்த எட்டு மாதத்தில் 1,000 கோடி ரூபாய் உண்டியல் பணம் வசூல் செய்திருப்பதாகவும் இது வரலாறு காணாத வசூல் சாதனை என்றும் கூறப்படுகிறது.
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் அதாவது ஏப்ரல் முதல் நவம்பர் வரை 1029 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
ஒரு ஆண்டில் 8 மாதத்தில் இவ்வளவு பெரிய தொகை இதுவரை வசூல் செய்தது இல்லை என்ற நிலையில் இந்த ஆண்டு வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் தங்கம் வைரம் வெள்ளி மற்றும் இ-உண்டியல் மூலம் இந்த தொகையை காணிக்கையாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva