சாலை தடுப்பில் மோதி பற்றி எரிந்த கார்; கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நிலைமை என்ன?
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் கோர விபத்திற்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான கிரிக்கெட் வீரராக இருப்பவர் ரிஷப் பண்ட். சில மணி நேரங்களுக்கு முன் உத்தரகாண்டில் ரிஷப் பண் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் எதிர்பாராத விதமாக சாலை தடுப்பின் மீது மோதியுள்ளது.
இதனால் கார் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. காரிலிருந்து மீட்கப்பட்ட ரிஷப் பண்ட் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit By Prasanth.K