செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 26 ஜூலை 2023 (11:18 IST)

இன்றும் நாளையும் அதிகனமழை: ஆந்திரா, தெலங்கானாவிற்கு சிவப்பு எச்சரிக்கை..!

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அதிக கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களிலும் கேரளா ஆந்திரா தெலுங்கானா போன்ற தென்மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் ஆந்திரா தெலுங்கானா மகாராஷ்டிரா கோவா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் இன்றும் நாளையும் அதீத கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து தெலுங்கானா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக புறப்படுகிறது. அதேபோல்  ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran