செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 மே 2021 (10:38 IST)

தலைமை செயலாளரை திரும்ப கொடுங்கள், காலில் விழவும் தயார்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மக்களின் நல்வாழ்விற்காக காலிலுள்ள கூட தயார் என்றும் தலைமைச் செயலாளரை மாற்றும் உத்தரவை ரத்து செய்யுங்கள் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் வீசிய யாஷ் புயல் குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்த முதல்வர் மம்தா பானர்ஜி அதிகாரிகளிடம் மட்டும் பேசிவிட்டு பிரதமரை மதிக்காமல் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதமர் அடுத்த சில நிமிடங்களில் மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளரை மாற்ற உத்தரவை பிறப்பித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் மாநில அரசை செயல்பட விடாமல் மத்திய அரசு இடையூறு செய்வதாகவும் தங்களுடைய பணிகளை செய்ய விடுமாறும் கேட்டுக் கொண்ட மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மக்களின் நன்மைக்காக பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கவும் தயார் என்றும் தலைமைச் செயலாளரை மாற்றும் உத்தரவை ரத்து செய்யுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.