செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (10:46 IST)

சற்றுமுன்: ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியது என்ன??

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இந்தியாவில் இரண்டாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறிய சில முக்கிய விஷயங்கள் பினவருமாறு... 
 
# வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது, இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன. 
# அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம்
# கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால்
# கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாக தயாராக உள்ளது
# உலகளவில் பொருளாதார நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது
# கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது
# இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது
# இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37% ஆக அதிகரித்துள்ளது
# 2021-21ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
# கொரோனா பாதிப்பால் ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
# மார்ச் மாதம் வாகன உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது
# கொரோனா பாதிப்பால் கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிக்கிறது
# கொரோனா பரவல் காரணமாக நாட்டின் மின்சார தேவை 20% முதல் 25% வரை குறைந்துள்ளது
# ஆட்டோ மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை மார்ச் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது
# உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று
# இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது, இது ஜி-20 நாடுகளில் அதிகம் 
# கொரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கமாக இருக்கிறது
#ஊரடங்கு காலக்கட்டத்தில் இணையதள பயன்பாடு மற்றும் இணையதள பணிப்பரிமாற்ற சேவை அதிகரித்துள்ளது