1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 மார்ச் 2018 (12:11 IST)

15 வது நாளாக தொடரும் அமளி; திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா

எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் ராஜ்யசபா வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரிய அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட வேண்டும் என்று தெலுங்கு தேச எம்.பி.க்களும் கடந்த 14 நாட்களாக ராஜ்யசபாவில் அவை நடக்க விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
 
இந்நிலையில் 15 வது நாளான இன்றும் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில எம்.பி.க்கள் அவை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டனர்.  தெலுங்கு தேசம் எம்.பிக்கள் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு இருக்கையை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர்.  இதையடுத்து ராஜ்யசபா திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என்று வெங்கையா நாயுடு அறிவித்து அவையை ஒத்தி வைத்தார்.