செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 17 ஜூன் 2024 (17:04 IST)

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! பதிலடி கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஹேக் செய்யக்கூடிய தான் என நேற்று எலான் மஸ்க்  கூறிய நிலையில் டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான் என்று முன்னாள் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி கொடுத்துள்ளார்.
 
இந்தியாவைப் பொருத்தவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் துல்லியமான நுண்ணறிவு கொண்ட சாதனம் அது என்பதால் அது வாக்குகளை மட்டுமே எண்ணுகிறது என்றும் எண்ணிக்கையை சேமிக்கிறது என்றும் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் கூறிய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது அதிநவீன இயந்திரம் அல்ல, அதை ஹேக் செய்யப்படலாம் என தவறாக ம்ஸ்க் நினைக்கிறார் என்றும் உண்மையில் அவர் சொல்வது தவறு என்றும் ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.
 
மேலும் உலகத்தில் பாதுகாப்பான எலக்ட்ரானிக் சாதனமே இல்லை என்ற அளவுக்கு தான் அவரது புரிதல் உள்ளது என்று கூறியுள்ள ராஜீவ் சந்திரசேகர் அவர் சொல்வது உண்மை என்றால் டெஸ்லா காரையும் ஹேக் செய்ய முடியும் என்று நினைக்கிறேன் என்றும் பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva