வட மாநிலங்களில் கொத்து கொத்தாக இறக்கும் மாடுகள்! – ட்ரெண்டாகும் #CowsNeedAttention
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் மாடுகள் மர்மமான நோய் தாக்கி உயிரிழந்து வரும் நிலையில் #CowsNeedAttention என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகளுக்கு வித்தியாசமான வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் உடல் முழுவதும் சின்ன சின்னதாக கட்டிகள் ஏற்பட்டு மாடுகள் உயிரிழந்து வருகின்றன.
ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள மாடுகளுக்கு அதிக அளவில் பரவி வரும் இந்த நோயால் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன. இது விவசாயிகள், பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் மாடுகளை காப்பதில் அரசு அக்கறை காட்டவில்லை என பொதுமக்கள் புகார் எழுப்ப தொடங்கியுள்ளனர். இதுதொடர்பான சமூக வலைதளங்களில் #CowsNeedAttention என்ற ஹேஷ்டேகில் இறந்த மாடுகளின் படங்களையும் பகிர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.