புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (09:47 IST)

குட் மார்னிங் கோச்... கொச்சியில் ஜப்பானிய கோச்சாகிய ராகுல் காந்தி!

கொச்சியில் உள்ள புனித தெரசா மகளிர் கல்லூரி மாணவிகளிடையே அக்கியடோ என்னும் ஜப்பானிய தற்காப்பு பயிற்சிகளை அளித்தார் ராகுல் காந்தி. 

 
தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்காக முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் வயனாடு எம்.பி-யான ராகுல் காந்தி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 
 
இதனைத்தொடர்ந்து நேற்று கொச்சியில் உள்ள புனித தெரசா மகளிர் கல்லூரி மாணவிகளிடையே அக்கியடோ என்னும் ஜப்பானிய தற்காப்பு பயிற்சிகளை அளித்தார். இதற்கு முன்னர் ஒரு கையால் புஷ் அப், கடலில் மீனவர்களுடன் நீச்சல், தொழிலாளர்களுடன் உணவு உண்ணுதல் ஆகியவற்றை செய்து மக்கள் மத்தியில் ஒருவராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.