மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்த வாக்காளர்களை விட பதிவான வாக்குகள் அதிகம் இருப்பது எப்படி என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் இடைப்பட்ட ஐந்து மாதங்களில் 39 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது எப்படி என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 39 லட்சம் வாக்காளர்கள் என்பது கிட்டத்தட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9.54 கோடி. ஆனால் அதைவிட 9.8 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இது எப்படி சாத்தியம் என்று அவர் தேர்தல் கமிஷனை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு தேர்தல் கமிஷன் என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva