திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 28 ஜனவரி 2024 (15:38 IST)

இந்தியா கூட்டணி உடைய ராகுல் காந்தியின் யாத்திரை தான் காரணமா? பரபரப்பு தகவல்..!

ராகுல் காந்தியின் பாதயாத்திரை காரணமாகத்தான் இந்தியா கூட்டணி உடைந்தது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தியின் பாதயாத்திரை சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த யாத்திரை காரணமாக மணிப்பூர், அசாம், மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் அதிகரிக்கும் என்று எண்ணப்பட்டது. 
 
குறிப்பாக மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் அதிகரிக்கப்பட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மமதா பானர்ஜி கருதினார். எனவேதான் அவர் முதல் நபராக  காங்கிரஸ் கட்சிக்கு சீட்டு ஒதுக்க முடியாது என்றும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். 
 
இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலும் இதே காரணத்திற்காக தான் தனித்து போட்டி என அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நிதிஷ்குமார் வெளியேறிய நிலையில் இந்தியா கூட்டணி சுக்குநூறாக உடைந்து விட்டது. எனவே ராகுல் காந்தியின் பாதயாத்திரை தான் இந்தியா கூட்டணீ  உடைய காரணம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran