மீண்டும் எம்பி ஆகியுள்ள ராகுல் காந்தி.. மீண்டும் பழைய பங்களா கிடைக்குமா?
ராகுல் காந்தி மீண்டும் எம்பி ஆகி உள்ள நிலையில் அவர் காலி செய்த பங்களா அவருக்கு மீண்டும் கிடைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது
மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது.
இதனை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. இதனை அடுத்து தற்போது மீண்டும் ராகுல் காந்தி எம்பி ஆகியுள்ளார் என்பதும் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராகுல் காந்தி மீண்டும் எம்பியாக தொடரும் நிலையில் டெல்லியில் அவரை வசித்து வந்த அரசு பங்களா அவருக்கு மீண்டும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை செயலகம் இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது
Edited by Siva