செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 மே 2020 (11:54 IST)

விசாக் விஷவாயு விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது! – ராகுல்காந்தி இரங்கல்

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கெமிக்கல் ஆலை ஒன்றில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில் அதிகாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனையால் அந்த பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் உள்ள பொதுமக்கள் உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிகிறது. 

இந்நிலையில் விஷவாயு கசிவு குறித்து இரங்கல்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ”விசாகப்பட்டிணம் விஷவாயு கசிவு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக நமது காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்” என கூறியுள்ளார்.

தொடர்ந்து தமன்னா உள்ளிட்ட திரை பிரபலங்களும் விசாகப்பட்டிணத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவு விபத்து குறித்து தங்கள் இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.