1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (17:58 IST)

''பசுக்களுக்கு முறையான இறுதி மரியாதை''- முதல்வர் அதிரடி உத்தரவு

cows
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பசுக்களுக்கு  முறையான  இறுதி மரியாதை அளிக்க வேண்டும் என முதல்வர் மோகன் யாதவ்  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்கு பசுக்கள் தங்குமிடங்கள் மற்றும் முறையான இறுதிமரியாதை அளிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
பசுக்கள் சாலைகளில் சுற்றித்திரிவதைத் தடுக்கும் வகையில், பசுக்களுக்கு கூடுதல் தங்குமிடங்கள் அமைக்க மத்திய பிரதேச அமைச்சரவை முடிவெடித்துள்ளது.
 
இதுகுறித்து முதல்வர் மோகன் யாதவ், பசுக்கள் இறந்தால் முறையான இறுதி மரியாதை செய்யவும், பசுக்களுக்கு சமாதி ஏற்படுத்தவும் மத்திய பிரதேச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.