வயநாடு தொகுதியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி.. பிரியங்கா காந்தி போட்டியா?
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் ரேபேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். இதனை அடுத்து அவர் ரேபேலி தொகுதியை தக்க வைத்துக்கொண்டு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து இன்னும் சில மாதங்களில் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படும் நிலையில் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த பொது தேர்தல் போது பிரியங்கா காந்தி போட்டியில் திட்டமிட்டதாகவும் ஆனால் அவர் பல மாநிலங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்ய வேண்டி இருந்ததால் போட்டியிடவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்த பின்னர் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி தான் போட்டியிடுவார் என்றும் ராகுல் காந்திக்கு வாக்களித்த மக்கள் பிரியங்கா காந்திக்கும் கண்டிப்பாக வாக்களிப்பார்கள் என்றும் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது.
இதன் மூலம் பிரியங்கா காந்தி தேர்தல் அரசியலில் ஈடுபட்டால் அதன் பின்னர் அவருக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran