வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 6 நவம்பர் 2024 (14:58 IST)

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி.. நண்பர் டிரம்புக்கு வாழ்த்துக்கள்: பிரதமர் மோடி..!

Modi Trump
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள எனது நண்பர் டிரம்புக்கு எனது வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 
 
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த டொனால்ட் டிரம்ப் அடுத்த அமெரிக்க அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார். 
 
இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற எனது நண்பர் டிரம்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மற்றும் உலகளாவிய அமைதியை எதிர்நோக்கி உள்ளேன். மக்கள் முன்னேற்றம், உலகளாவிய அமைதி நிலைத்தன்மை ஆகியவற்றிற்காக இரு நாடுகளும் இணைந்து பாடுபடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 
Edited by Mahendran