சாமியாரின் காமவெறி; 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!
சாமியாரின் காமவெறி; 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன, நிர்பயா பலாத்கார சம்பவத்துக்கு பின்னர் இதுபோன்ற நிகழ்வுகள் குறையும் என்று பார்த்தால், குறைந்தபாடில்லை.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் சாமியார் ஒருவர் 10 வயது சிறுமியை மாதக்கணக்கில் பலாத்காரம் செய்து வந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த சாமியாரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
டெல்லி அருகே உள்ள ஜெய்த்பூர் பகுதியில் குடிசை ஒன்றில் வசித்து வருகிறார் டோங்கி பாபா என்பவர். இவர் தன்னை சாமியார் என கூறிக்கொண்டு பூஜைகள் செய்து வந்தார். இதனால் அருகில் உள்ளவர்கள் இவரை நம்பி அவரது குடிசைக்கு சென்று பூஜையில் கலந்துகொண்டு வந்தனர்.
இதில் ஒரு பெண் தனது 10 வயது மகளுடன் அடிக்கடி சாமியாரின் பூஜைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அந்த சாமியார் அந்த 10 வயது சிறுமியை தனியாக அழைத்துக்கொண்டு போய் பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார்.
கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக இந்த சாமியார் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார். வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியும் உள்ளார் இவர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூற அவர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சாமியாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.