வியாழன், 13 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : சனி, 3 டிசம்பர் 2016 (15:20 IST)

குளியலறையில் பெண்களுடன் உல்லாசமாய் இருந்த சாமியார் - வெளியான வீடியோ

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு சாமியார் பெண்களுடன் ஆபாச லீலையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மராட்டிய மாநிலம் அமராவது மாவட்டம் அசல்பூர் தாலுகாவில் உள்ள எல்கிபூர்ணாகாவ் எனும் கிராமத்தில் சாமியார் பாலயோகி முரளிதர் மகாராஜா ஆசிரமமம் நடத்தி வருகிறார்.
 
அவர் நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இந்நிலையில், அவர் குளியலறையில் இளம் பெண்களுடன் உல்லாசத்தில் ஈடுபடும் வீடியோ நேற்று மராத்தியில் ஒரு தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். 
 
விசாரணையில், சாமியாரின் ஆபாச லீலைகளை கண்டு எரிச்சல் அடைந்த, அந்த ஆசிரமத்திலேயே தங்கியிருந்த ஒரு பெண் பக்தர், இதுபற்றி ஒரு சமூக ஆர்வலரிடம் கூறியுள்ளார். சரியான ஆதரத்துடன் சாமியாரின் ஆபாச லீலைகளை அம்பலப்படுத்த திட்டமிட்ட சமூக சேவகர், ஒரு ரகசிய கேமராவை அந்த பெண்ணிடம் கொடுத்து, சாமியாரின் குளியல் அறையில் வைக்கும் படி கூறினார்.
 
அந்த பெண்ணும் அப்படியே செய்துவிட்டார். இது தெரியாத அந்த சாமியார், வழக்கம் போல் அந்த குளியல் அறையில் பெண்களை அழைத்து வந்து உல்லாசத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோவைத்தான் சமூக ஆர்வலர் வெளியிட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
 
மேலும், அந்த சமூக ஆர்வலர்,  வீடியோ ஆதாரத்துடன், அந்த சாமியார் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். எனவே இதுகுறித்து போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.