வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (16:25 IST)

அரசுப் பள்ளிக்குச் சென்ற அதிபர் டிரம்பின் மனைவி !

நேற்று  (24 ஆம் தேதி)  குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு தனது குடும்பத்தினருடன் விமானத்தில் வந்திறங்கிய அதிபர் டிரம்ப், அங்குள்ள பட்டேல் மைதானத்தில் 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். 
 
அதன்பிறகு,   உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா நதிக்கரையில் உள்ள தாஜ்மஹாலைப் பார்க்க டிரம்ப் தனது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னருடன் யனுமை நதிக்கரையில் உள்ள தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தார். அப்போது, டிரம்ப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி விளக்கினார்.
 
இந்நிலையில், இன்று, தலைநகர் டெல்லியில், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் இணைந்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் முக்கிய ஒப்பந்தங்களில்  கையெழுத்திட்டனர்.
 
இதற்கிடையே அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா, டெல்லியில் நானாக்புராவில் 
2,299 மாணவர்களும், 80 ஆசிரியர்களும்,  மற்றும் 50 ஊழியர்களும் உள்ள பள்ளிக்குச் சென்று சென்றார். 

சமீபத்தில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி ஆளும் டெல்லியில், அரசுப் பள்ளிகளில் ஏசி வகுப்பறைகள், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதை மெலானியா டிரம்ப் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பள்ளிகுழந்தைகளுடன் மெலனியா டிரம்ப் கலந்துரையாடினார். 
 
இதுகுறித்து மெலனியா கூறியதாவது, என்னை பாரம்பரிய நடனம் மூலம் வரவேற்றதற்கும் உங்கள் அன்புக்கும் மிகவுன் நன்றி என தெரிவித்துள்ளார்.