வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2019 (20:32 IST)

சிவசேனாவின் பேராசையால் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிவசேனா முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு பிடிவாதம் பிடித்ததால் அம்மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இருந்தாலும், யாருக்கு முதல்வர் பதவி என்ற போட்டியின் காரணமாக அம்மாநிலத்தில் கடந்த 20 நாட்களாக அரசியல் இழுபறி ஏற்பட்டு வந்தது 
 
வெறும் 50 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற சிவசேனா கட்சி தங்களுக்கு இரண்டரை ஆண்டுகாலம் சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது 
 
இந்த நிலையில் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா, தங்களுக்கு எதிராக போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்தது
 
ஆனால் சிவசேனாவுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து இந்த முயற்சியும் பலிக்கவில்லை. இதனையடுத்து இன்று மாலை மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பிறப்பித்தார் இதனையடுத்து தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது 
 
இருப்பினும் ஆட்சி அமைக்க எந்த கட்சியாவது மெஜாரிட்டியுடன் முன்வந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சிவசேனா கட்சிக்கு துணை முதல்வர் உட்பட 13 அமைச்சர்கள் பதவி தருவதாக பாஜக தெரிவித்து இருந்தும், அந்த கட்சி தலைவர்களின் பேராசையால் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது