1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (21:52 IST)

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு படகிலேயே பிரசவம்

உத்தரபிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண், மீட்பு பணியால் அழைத்து வரும் போது அவருக்கு படகிலேயே குழந்தை பிறந்தது.


 

 
உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் பலப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்நிலையில் பாந்தா பகுதியில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு படகிலேயே பிரசவ வலி எடுத்து குழந்தை பிறந்தது. வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணும், அவரது குழந்தையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வரப்பட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.