1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 2 நவம்பர் 2024 (15:10 IST)

தேர்தலில் ஆலோசனை கூற எனது சம்பளம் ரூ.100 கோடி: பிரசாந்த் கிஷோர்

Prasanth Kishore
ஒரு அரசியல் கட்சிக்கு தேர்தலில் ஆலோசனை கூற எனது சம்பளம் ரூபாய் 100 கோடி என்று பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ், பாஜக, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்பட பல கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் ஆலோசனை கூறிய நிலையில், தற்போது அவர் ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்கி, பீகாரில் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

இந்த நிலையில், தேர்தலுக்கு ஒரு அரசியல் கட்சிக்கு நான் ஆலோசனை கூறினால் எனக்கு கிடைக்கும் சம்பளம் 100 கோடி என்றும், ஒரே ஒரு தேர்தலுக்கு நான் ஆலோசனை கூறினால் எனது பிரச்சாரத்துக்கு என்னால் செலவு செய்ய முடியும் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

தனது சம்பளம் குறித்து பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாக கூறியிருப்பதால், கடந்த காலங்களில் அவரை தேர்தல் ஆலோசகராக பயன்படுத்திய திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் தனது கட்சியின் தேர்தல் செலவுக்காக யாரிடமும் கையேந்த போவதில்லை என்றும், தேர்தல் ஆலோசனை கூறியதன் மூலம் வரும் பணத்தில் கட்சியை நடத்துவேன் என்றும் அவர் கூறியிருப்பது இன்னொரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran