செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (13:09 IST)

மிகப்பெரிய தவறு செய்துள்ளது கம்யூனிஸ்ட் கூட்டணி.. நடிகர் பிரகாஷ்ராஜ்

prakashraj
கேரளாவில் கம்யூனிஸ்ட் கூட்டணி மிகப்பெரிய தவறு செய்து விட்டது என்றும் பாஜக சதியால் அந்த கூட்டணி விழுந்து விட்டது என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசி உள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக எதிர் எதிராக போட்டியிட வேண்டும் என்பதுதான் பாஜகவின் சதி என்றும் அந்த சதியில் கம்யூனிஸ்ட் கட்சி விழுந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக திருவனந்தபுரத்தில் சசிதரூருக்கு  எதிராக வேட்பாளரை நிறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய தவறு செய்து விட்டது என்றும் காங்கிரஸ் மற்றும் இடது முன்னணி ஆகிய இரண்டு கூட்டணிகளும் மாறி மாறி வாக்குகளை பிரித்தால் அது பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அமையும் என்றும் இந்த பாஜகவின் சதியில் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி விழாமல் இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

 நான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவானவன் இல்லை என்றாலும் சசிதரூரை எனக்கு பிடிக்கும் என்று அவர் திருவனந்தபுரத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் போட்டியிடும் ராஜீவ் சந்திரசேகர் மோடிக்கு எதிராக குரல் கொடுக்க மாட்டார் என்றும் வேட்புமனு தாக்கலில் பொய் சொல்வதில் மட்டும் உறுதியாக இருப்பார் என்றும் ஒரு பொய்யை 100 முறை சொன்னால் அது உண்மையாக விடும் என்று நம்புபவர்களில் ராஜீவ் சந்திரசேகர் ஒருவர் என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva