விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்தது பிரக்யான் ரோவர்.. ஒவ்வொரு அங்குலமாக நகர்வதாக தகவல்..!
இந்திய விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 நேற்று சந்திரனை அடைந்தது என்பதும் விக்ரம் லேண்டர் தரை இறங்கியதை கோடிக்கணக்கான இந்தியர்கள் கொண்டாடினார்கள் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதை அடுத்து தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் முழுமையாக பிரிந்து உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவின் மேற்பரப்பில் வெற்றி கரமாக பிரக்யான் ரோவர் கால் பதித்ததாகவும் லேண்டர் தரை இறங்கி ஆறு மணி நேரத்திற்கு பின்னர் பிரக்யான் ரோவர் நிலவில் தரையை தொட்டதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
பிரக்யான் ரோவர் மெல்ல மெல்ல ஒவ்வொரு அங்குலமாக ஊர்ந்து நிலவில் தனது முதல் அடியை எடுத்து வைத்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 14 நாட்களுக்கு நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் ஆய்வு மேற்கொள்ளும் என்றும் அங்கிருந்து பல புகைப்படங்களை எடுத்து அனுப்பும் என்பதும் குறிப்பிடத்தக்கது
Edited by Siva