1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 3 ஜூன் 2022 (19:56 IST)

கடலை மிட்டாய் வியாபாரம் செய்யும் அஞ்சல்துறை: ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

post
இந்திய அஞ்சல் துறை புவிசார் கோவில்பட்டி கடலைமிட்டாயை இந்தியாவிலுள்ள எந்த பகுதிக்கும் அனுப்பும் என்று தகவல் வெளியாகியுள்ளது 
 
புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய் இந்தியா முழுவதும் புகழ் பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் அஞ்சல் துறை மூலமாக விற்பனை செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் எங்கிருந்தாலும் தபால் நிலையங்களில் ரூபாய் 390 கொடுத்து ஒரு கிலோ கடலை மிட்டாய் பாக்கெட்டை பெறலாம் என்றும், ஆர்டர் செய்யப்பட்ட கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் தபால் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது