ஆணுறையில் அரசியல் கட்சிகளின் சின்னம்! ஆந்திராவில் வெற லெவலில் தேர்தல் பிரச்சாரம்!
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஆணுறையில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஆணுறைகள் மிக அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில் ஆணுறைகளை பிரச்சார கருவியாக அம்மாநில அரசியல் கருவி அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன
இரண்டு முக்கிய கட்சிகள் தங்கள் கட்சியின் சின்னங்களை ஆணுறையில் அச்சிட மிகப்பெரிய அளவில் பணம் கொடுத்துள்ளதாகவும் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய இரண்டு கட்சிகள் தான் ஆணுறை பாக்கெட்டுகளில் தங்கள் கட்சியின் சின்னத்தை பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது
இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இது பெரிய விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. மேலும் தங்கள் கட்சி சின்னத்துடன் கூடிய ஆணுறைகளை இலவசமாகவும் விநியோகம் செய்யவும் அரசியல் கட்சிகள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Mahendran