1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2016 (09:14 IST)

பலாத்காரம் செய்தவர்களில் உன்னை யார் அதிகமாக சந்தோஷப்படுத்தியது: போலீசின் வக்கிரம்!

பலாத்காரம் செய்தவர்களில் உன்னை யார் அதிகமாக சந்தோஷப்படுத்தியது: போலீசின் வக்கிரம்!

கேரளாவில் 33 வயதான பெண் ஒருவர் தனது கணவரின் நண்பர்கள் 4 பேரால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பலாத்காரம் செய்யப்பட்டார். தொடர் மிரட்டல்களால் இந்த கொடூர சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் இருந்த அந்த பெண் ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார்.


 
 
ஆனாலும் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து மிரட்டல் சென்றிருக்கிறது. போலீசும் தங்கள் பங்கிற்கு அந்த பெண்ணை சித்திரவதை செய்துள்ளனர். உன்னை பலாத்காரம் செய்தவர்களில் யார் உன்னை அதிகமாக சந்தோஷ்ப்படுத்தியது போன்ற வக்கிரமான கேள்விகளை எல்லாம் கேட்டுள்ளனர்.
 
இவற்றை எல்லாம் எதிர் கொள்ள முடியாத அந்த பெண் தனது வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து பிரபல மலையாள டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுத அது வைரலாக பரவியுள்ளது.
 
பலராலும் பகிரப்பட்ட இந்த சம்பவம் குறித்தான பதிவு கேரளா முதலமைச்சர் வரைக்கும் சென்றுள்ளது. தற்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா முதலமைச்சர் உறுதியளித்திருக்கிறார்.