Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2017 (10:31 IST)
பொது மேடையில் பிரதமர் மோடியை காலில் விழ வைத்த பெண்
இந்தியாவின் ஏன் உலகத்தின் மிக சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவர் நமது பாரத பிரதமர் நரேந்திரமோடி என்பது அனைவரும் அறிந்ததே. இப்படிப்பட்ட பவர் உள்ள பிரதமர் மோடியையே ஒரு பெண் பொதுமேடை ஒன்றில் தன்னுடைய காலில் விழ வைத்துள்ளார் என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் உண்மை தான்
அந்த பெண்ணின் பெயர் குன்வர் பாய். 104 வயதான இந்த மூதாட்டி தனது ஆடுகளை விற்று கழிவறை கட்டியவர். மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்காற்றியவர்களுக்கு ராய்பூரில் இன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் பரிசு வாங்க வந்திருந்த இந்த மூதாட்டியின் காலில் விழுந்து பிரதமர் மோடி மரியாதை நிமித்தம் வணங்கினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் வாய்பாய் பிரதமராக இருந்த போது, மதுரை மாவட்டத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை எனும் மூதாட்டியின் கால்களை தொட்டு வணங்கினார். கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் சின்னப்பிள்ளை. அவருடைய சாதனையை பாராட்டி விருது வழங்கிய வாஜ்பாய், அவரது காலில் விழுந்து வணங்கினார். அதேபோல் தற்போது குன்வர் பாயின் காலில் மோடி விழுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.