1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 24 அக்டோபர் 2022 (07:50 IST)

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம்: பிரதமர் வாழ்த்து

Diwali 1
இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் பிரதமர் மோடி பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 
நாடு முழு கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் தீபாவளியை பெரிதாகக் கொண்டாட முடியாத நிலையில், பொதுமக்கள் இந்த ஆண்டு தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்
 
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது. புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து குடும்பத்துடன் இணைந்து தீபாவளியை மக்கள் கொண்டாடி வருகின்றனர் 
 
இந்நிலையில் பிரதமர் மோடி சற்று முன் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்றும் இந்த தீபாவளித் திருநாள் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும் என்றும் நண்பர்கள் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட எனது நல்வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva