வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (11:48 IST)

நாளை ஜி20 உச்சி மாநாடு; என்ன பேசப் போகிறார் பிரதமர் மோடி?

Pm Modi
நாளை இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று புறப்படுகிறார்.

உலக பொருளாதாரத்தில் வளர்ந்த மற்றும் வளரும் 20 நாடுகள் சேர்ந்த அமைப்பு ஜி20 எனப்படுகிறது. இந்த அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும், இந்தியா, இந்தோனேஷியா, அர்ஜெண்டினா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளும் என மொத்தம் 20 நாடுகள் உறுப்பினர்களாய் உள்ளன.


ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஜி20 உச்சி மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு தலைமை ஏற்று நடத்துகிறது. இந்த ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தோனேஷியா நடத்துகிறது. நாளை நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுசூழல், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பங்கேற்க உள்ளார். மேலும் இதுதொடர்பாக மற்ற நாடுகளுடனான கூட்டுறவு செயல்பாடு குறித்தும் மற்ற நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

Edit By Prasanth.K