வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஜூன் 2024 (12:37 IST)

உள்துறை, பாதுகாப்பு, ரயில்வே, நிதித்துறை கூட்டணி கட்சிகளுக்கு கிடையாது: பிரதமர் மோடி கறார்..!

Modi Won
ரயில்வே, நிதித்துறையை கூட்டணி கட்சிகள் கேட்டு வரும் நிலையில் அவற்றை விட்டுத் தர முடியாது என பா.ஜ.க. கறார் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
உள்துறை, பாதுகாப்புத்துறை, ரயில்வே, நிதித்துறை போன்ற முக்கிய துறைகளை கூட்டணிகளுக்கு விட்டுத் தர முடியாது என மோடி கண்டிப்பு காட்டுவதாகவும் இதனால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து 242 தொகுதிகளிலும் கூட்டணியாக 293 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 10 பேர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியிடம் முக்கிய துறைகளை குறிப்பாக உள்துறை, பாதுகாப்பு, ரயில்வே மற்றும் நிதித்துறைகளை கேட்டு வருவதாகவும் ஆனால் முக்கிய துறைகளை கூட்டணி கட்சி எம்பி களுக்கு அளிக்க முடியாது என பாரதிய ஜனதா கட்சி தலைமையும் பிரதமர் மோடியும் கறாராக கூறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சியில் இருந்தாலும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. 
 
இந்தியா கூட்டணியில் ஏற்கனவே 36 கட்சிகள் இருக்கும் நிலையில் அங்கு போனால் இதைவிட மோசமாக தான் துறைகள் கிடைக்கும் என்றும் இதனால் கூடியவரை பாஜக மேல் இடத்தில் பேசி நல்ல துறைகளை கேட்டு பெறுவோம் என்று கூட்டணி கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran