விவசாயம், மீன்பிடிக்கவும் ட்ரோன் பயன்படுத்தலாம்! – பிரதமர் மோடி யோசனை!
டெல்லியில் நடந்த ட்ரோன் திருவிழாவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ட்ரோன் பயன்பாடு குறித்து பேசியுள்ளார்.
இந்தியாவில் ட்ரோன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் திருமண நிகழ்ச்சிகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த ட்ரோன்கள், பின்னர், போக்குவரத்து நெரிசலை கண்காணிப்பது உள்ளிட்ட பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக உணவு டெலிவரி நிறுவனங்கள், கூரியர் சேவை நிறுவனங்களும் ட்ரோன் மூலம் டெலிவரி செய்வது குறித்து முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற ட்ரோன் திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர் “மத்திய அரசின் சிறந்த கொள்கைகளால் இந்தியாவில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. விவசாயம், மீன்பிடி தொழில் போன்ற துறைகளில் ட்ரோன்கள் சிறப்பான பலனை தரும். வயல்களில் பூச்சி மருந்து தெளிப்பது போன்ற பணிகளை ட்ரோன்கள் மிகவும் எளிமையாக செய்கின்றன” என்று கூறியுள்ளார்.